Saturday, 30 August 2014

தனிக்கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்! பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு!!

தனிக்கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்! பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு!!


சென்னை: தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார்.. என்ற பேச்சு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.. ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்களும் அவருக்கு நெருக்கடி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


மோடி சந்திப்பு


லோக்சபா தேர்தலின் போது சென்னைக்கு பிரசாரத்துக்கு வந்த நரேந்திர மோடி, ரஜினி வீட்டுக்கே சென்று சந்திக்க அரசியல் அரங்கில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகமானது. ஆனாலும் ரஜினிகாந்த் வெளிப்படையாக எதனையும் அறிவிக்காமல் இருந்தார்.

தனிக்கட்சிதான் சரி


தனிக் கட்சி தொடங்கி பாஜக அணியில் உள்ள இதர கட்சிகள் அனைத்தையும் விட மிக மிக கூடுதலான தொகுதிகளில் போட்டியிட்டால்தான் மரியாதையாக இருக்கும் என்பதும் ரஜினியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அட்வைஸாம்.


















ரஜினிகாந்தும் இதுதான் சரியான ரூட்டாக இருக்க முடியும் என்ற அடிப்படையில் ஆமோதித்தபடியே தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறாராம்.









Friday, 29 August 2014

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் தேதி வெளிவந்தது

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் தேதி வெளிவந்தது 



வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி சுதாகரன் ஆகியோர் மீது 1997ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 1998ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இருதரப்பு வாதமும் முடிந்து விட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வர இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகும். இதனால் தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம்.

இன்று இரவுக்குள் அழகிரி அரெஸ்ட்?

இன்று இரவுக்குள் அழகிரி அரெஸ்ட்?



மு.க.அழகிரி திமுகவுக்கு திரும்ப பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் தயா பொறியியல் கல்லூரிக்காக கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக வழக்கு பாய்ந்துள்ளது, வழக்கு பதிவை தொடர்ந்து இன்று இரவுக்குள் மு.க.அழகிரி கைது செய்யப்படலாம் என மதுரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
                                          மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. தயா கல்லூரியை கட்டுவதற்காக கல்லூரியீன் அருகிலுள்ள விநாயகர் கோவிலின் 44 சென்ட் நிலத்தை திட்டமிட்டு போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக மு.க.அழகிரி மீது அதே கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர்  கடந்த ஜூன் மாதம் மதுரை கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். இது குறித்து கடந்த மூன்று நாட்களாக மதுரை அரசு வட்டாரங்களில் நடந்த நீண்ட கலந்தாய்வுக்கு பின் மு.க.அழகிரி மீது நிலஅபகரிப்பு புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இரவுக்குள் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. # ஸ்டாலின் ஹேப்பி அண்ணாச்சி - 

Wednesday, 10 July 2013

லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்; அத்துமீறலை நியாயப்படுத்துகிறது, சீனா

லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்; அத்துமீறலை நியாயப்படுத்துகிறது, சீனா:


லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்; அத்துமீறலைபீஜிங்,

இந்திய எல்லைக்குள் படைகளின் அத்துமீறலை சீனா நியாயப்படுத்தி உள்ளது.

சீன ராணுவ வீரர்கள்

இமாசலபிரதேசம் லடாக் அருகே உள்ள ஜுமார் பகுதியில் லே என்ற இடத்தில் சீன ராணுவம் கடந்த ஏப்ரல் மாதம் ஊடுருவியது. பின்னர் இரு நாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் சமரச முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து சீன ராணுவம் இந்திய எல்லையில் இருந்து வெளியேறியது.

அதைத்தொடர்ந்து சீன ராணுவத்தினரின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்தியா சார்பில் அமைக்கப்பட்டிருந்த கோபுரம் அகற்றப்பட்டு அங்கு ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.

மீண்டும் ஊடுருவல்

இந்த நிலையில் கடந்த ஜூன் 17–ந்தேதி மீண்டும் சீன மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் ஜுமார் பகுதியில் ஊடுருவி, அங்கு இந்திய ராணுவம் அமைத்திருந்த கண்காணிப்பு அமைப்புகளையும், பதுங்கு குழிகளையும் சேதப்படுத்தினர். மேலும் அங்கு வைத்திருந்த கண்காணிப்பு கேமராக்களின் ஒயர்களையும் துண்டித்து சேதப்படுத்தினர்.

இவ்வாறு அடிக்கடி இந்திய பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவும் சம்பவம் இந்தியாவில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மாற்ற முடியாது

இந்தநிலையில் இந்த பிரச்சினை குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– எல்லைப்பகுதியில் நிலைமை சீராக உள்ளது. ஊடுருவல் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. நாங்கள் அங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

 எங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன ராணுவத்தினர் எல்லைக்கோடு அருகே, சீனப்பகுதியில்தான் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப்பகுதியில் தற்போது இருக்கும் நிலையை யாராலும் (இந்தியாவோ – சீனாவோ) மாற்ற முடியாது. எல்லைப்பகுதியின் அமைதிக்கு இந்தியாவுடன் நாங்கள் இணைந்து செயல்படவே விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

எல்லையில் எதுவும் செய்யக்கூடாது என்பதை மீறி இந்தியா கண்காணிப்பு கேமராக்களை அமைத்ததால் சீன ராணுவம் அவற்றை சேதப்படுத்தியது என்னும் கருத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

 நியாயப்படுத்துகிறது, சீனா

Tuesday, 9 July 2013

மீண்டும் ஷங்கருடன் கைகோர்க்கும் விஜய்

மீண்டும் ஷங்கருடன் கைகோர்க்கும் விஜய்:



தலைவா படத்தின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கும் விஜய், தற்போது நேசன் இயக்கத்தில் ஜில்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜில்லா படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் விஜய்.
முருகதாஸ்-விஜய் கூட்டணி 'துப்பாக்கி' என்ற மெகா ஹிட் படத்தை கடந்த வருடம் கொடுத்தது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதற்காக கால்ஷீட்டை பத்திரப்படுத்தி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஏ ஆர் முருகதாஸ் படத்தை முடித்து விட்டு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
ஷங்கர் தற்போது விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் நடிக்கும் 'ஐ' பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றும், இதை முடித்து விட்டு விஜய் படத்திற்கான தொடக்கப்பணிகளில் ஷங்கர் ஈடுபடுவார் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Monday, 8 July 2013

புத்த கயா கோவில் திறப்பு: சிறப்பு பிரார்த்தனை

புத்த கயா கோவில் திறப்பு: சிறப்பு பிரார்த்தனை


புத்த கயா: பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த குண்டுவெடிப்பின்போது எடுக்கப்பட்ட ரகசிய காமிராக்களில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இதில் பலரும் சிதறி ஓடும் காட்சிகள் தான் இருந்தன என்றும், இதில் குற்றவாளிகளை பிடிக்க பயன்தரும் விஷயங்கள் எதுவுமில்லை என தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கிடையே பக்தர்களுக்கு கோயில் திறக்கப்பட்டது. புத்த பிட்சுள் சிறப்பு பிரார்த்னை செய்தனர்


நேற்று அதிகாலை புத்த கயாவில் உள்ள மகாபோதி ஆலயத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதனை தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ‌தொடர்பான விசாரணையி்ல் எவ்வித முன்னேற்றமும் இல்லை. போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 

சி.சி.டி.வி. பதிவுகள் வெளியீடு : இந்நிலையி்ல் புத்த கயாவில் வைக்கப்பட்டிருந்த சி.சி.வி. காமிராவில் சில காட்சிகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தின் போது , பார்வையாளர்கள் திடீரென ஏதோ பயங்கர சத்தம் கேட்டு அங்குமிங்கும் பதறியடித்து ஓடுவது போன்று காட்சி அதில் பதிவாகியுள்ளது. இதற்கிடையில் ஒருவ‌ரிடம் போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

மியான்மர் பயங்கரவாதிகள் இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கெளுக்கென இந்தியாவில் உள்ள சில அமைப்பினர் கை கோர்த்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.