Monday 24 June 2013

பிணங்களை எரிக்க 50 டன் மரங்கள் ; ஒரே இடத்தில் தகனம் செய்ய முடிவு

பிணங்களை எரிக்க 50 டன் மரங்கள் ; ஒரே இடத்தில் தகனம் செய்ய முடிவு:




டேராடூன்: சமீபத்திய வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என மாநில பேரிடர் மேலாண் துறை அமைச்சர் யஸ்பால் ஆரியா கூறியுள்ளார். பத்ரிநாத்தில் மட்டும் இன்னும் 10 ஆயிரம் பேர் வரை மீட்கப்படாமல் இருக்கின்றனர் என தெரிகிறது. இன்னும் 3 முதல் 4 நாட்கள் வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக எரித்து தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நேரத்தில் பிரேத பரிசோதனை செய்ய வாய்ப்பில்லை என்றும். பலரது உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண முடியவில்லை. இவர்களின் புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் அரசு இணையதளத்தில் அப்லோடு செய்யப்படும் என மாநில அரசு தெரிவித்ள்ளது. இந்த பிணங்களை கேதார்நாத்தில் ஒரே இடத்தில் தகனம் செய்ய 50 டன் மரங்கள் மற்றும் நெய் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என உத்தரகண்ட் மாநில முதல்வர் விஜய்பகுகுணா நேற்றுதெரிவித்திருந்தார். இன்று மட்டும் 124 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் இது வரை 82 ஆயிரம் பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அதிகாரப்பூர்வமாக 680 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது மழை பெய்து வருவதால் கேதார்நாத், பத்ரிநாத், டேராடூன், ரிஷிகேஷி ஆகிய பகுதிகளில் இன்று மீட்பு நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெலிகாப்டர் மூலம் நடக்கும் மீட்புப் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹனுமன் ஜெட்டி, ஜிங்குள் ஜெட்டி பகுதிகளில் பலர் இன்னும் தவித்து வருவதாக தெரிய வந்துள்ளது. தற்போது மழை மற்றும் மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

துல்லியமாக சொல்ல முடியவில்லை : வெள்ள சேத விவரம் குறித்து பேரிடர் மேலாண் துறை அமைச்சர் யஸ்பால் ஆரியா கூறுகையில்; தரை மற்றும் வான் வழி மீட்பு பணியில் நேற்று மட்டும் 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 10 ஆயிரம் பேர் தவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரம் இருக்கும் என தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். துல்லியமாக சொல்ல முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

பி.எஸ்.என்.எல். இலவச தொலைபேசி: வெள்ளம் பாதித்த பகுதிகளில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோர் அங்கிருந்தபடி தங்களின் உறவினர்களை கட்டணமின்றி இலவசமாக போனில் தொடர்பு கொண்டு பேசிக்கொள்ள முடியும். மேலும் சாட்டிலைட் போன்களும் நிறுவப்பட்டுள்ளன.

பிணங்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம்: நேற்று தமிழகம் திரும்பிய பயணிகள் நிருபர்களிடம் பேசுகையில்; திடீரென மழை பெய்து எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஒடியதை பார்க்க முடிந்தது. எங்கு செல்வது என்றே தெரியவில்லை. நாலாபுறமும் சிதறி ஓடினோம். எங்கள் கண் முன்னே உறவினர் தண்ணீரில் இழுத்து செல்வதை பார்த்தோம். 5 நாட்கள் பெரும் அவதிப்பட்டோம். மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை. உணவு இல்லை. சிலர் பட்டினியால் இறந்து போயினர். நாங்கள் இரவு , பகல் முழுவதும் கடும் குளிரில் பெரும் துயரப்பட்டோம். எங்களை சுற்றி பிணங்கள் கிடந்தன. பிணங்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம் என்றனர் கண்ணீருடன் .

வெள்ள அபாய எச்சரிக்கை: இதற்கிடையில் மேலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் , கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர், மேலும் உத்தரபிரதேச மாநில மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

பிணங்களை எரிக்க 50 டன் மரங்கள்: வெள்ளத்தில் பலியானவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது. நேற்று வெளியிடப்பட்டுள்ள தகவலில் 1000 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.இந்நிலையில் பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கேயே தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக அம்மாநில கர்வால் மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டின் பேரில் வெள்ளத்தில் பல்வேறு இடங்களில் பலியான உடல்கள் கேதார்நாத் கொண்டுவரப்பட்டு ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்ய 50 டன் மரங்கள், நெய் முதலானவைகள் பயன்படுத்தப்பட உள்ளன. இன்று இறுதி சடங்குகள் நடக்கின்றன.

Friday 21 June 2013

தொடரும் கேதார்நாத் சோகம்: பசியால் 150 மரணம்

தொடரும் கேதார்நாத் சோகம்: பசியால் 150 மரணம்:


புது டில்லி: நிலச்‌சரிவில் இருந்து மீண்ட மக்களுக்கு போதுமான உணவு கிடைக்காததால் பசியால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரி்த்துள்ளது.,

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவி்ல் சிக்கி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்‌கை பல ஆயிரங்‌களை கடந்து சென்று கொண்டிருக்கும் நேரத்தில் தற்‌‌போது உயிர் பிழைத்தவர்கள் தங்களுக்கு போதுமான உணவு கிடைக்காமல் பசியால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை 150-ஐ எட்டியுள்ளது. இவர்களில் பெரும் பாலானோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிலச்சரிவில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் மலை உச்சியில் சிக்கி தவித்தவர்கள் தங்களுக்கு எவ்வித உணவும் கிடைக்க வில்லை என தெரிவித்தனர். உணவு பொருட்கள் கிடைக்காததால் பசியால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதி்கரித்துள்ளது.

இதுகுறித்து இந்தோ திபெத் பார்டர் போலீஸ் (ஐடிபிபி ) அதி்காரி கூறுகையில் மாநிலத்தில் கேதார்நாத் பகுதியை சேர்நத ராம்பாதா மற்றும், கவுரிகான் , ஜங்கிள் செட்டி பகுதிகள் தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரம் ‌பேர் வரையில் சிக்கி யுள்ளனர். தற்போது ஹெலிகாப்டர் மூலம் சுமார் 275 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகள் சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மீ்ட்பு படையினர் செங்குத்தான சரிவி்ல் இறங்க வேண்டிய சூழ்நிலையில் வானிலை தொடர்ந்து சாதகமற்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

நோவோசிப்ரிஸ்க் மிருகக்காட்சியில் சிங்கத்தின் குட்டி பாதி பெண்சிங்கம், பாதி புலி

நோவோசிப்ரிஸ்க் மிருகக்காட்சியில் சிங்கத்தின் குட்டி பாதி பெண்சிங்கம், பாதி புலி:













வருகிறது 'அம்மா மினரல் வாட்டர்' : பாதுகாப்பான குடிநீர் வழங்க முதல்வர் ஜெயலலிதா திட்டம்

வருகிறது 'அம்மா மினரல் வாட்டர்' : பாதுகாப்பான குடிநீர் வழங்க முதல்வர் ஜெயலலிதா திட்டம்:.




சென்னை: குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் இந்த குடிநீர் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். 

அங்கு உற்பத்தியாகும் குடிநீர் ஒரு லிட்டர் அளவுக் கொண்ட பிளாஸ்டிக் பாட்டீல்களில் நிரப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந் தேதி அன்று தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் 9 இடங்களில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ராமதாஸ் அறிவிப்பு-திகிலில் திமுக!

ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ராமதாஸ் அறிவிப்பு-திகிலில் திமுக!




ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று பா.ம.க. அறிவித்துவிட்டது. இதனால் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியின் வெற்றி தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து முடிவெடுக்க சென்னையில் இன்று அக்கட்சியின் செயற்குழுக் கூடியது. இந்த கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான வியாழக்கிழமை மாலை 3 மணி வரை யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை. இதனால், 6 இடங்களுக்கு ஏழு பேர் போட்டியிடுவதால் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.



அதிமுகவைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்கள், அதிமுக ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜா ஆகியோரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனினும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் ஆகியோர் இடையே 6-ஆவது இடத்துக்கு நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

வெற்றிக் கோட்டை எட்டுவதற்கு தேமுதிக, திமுக ஆகிய கட்சிகளுக்கு 5 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரஸ், 3 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாமக ஆகியோரின் ஆதரவு மிகவும் அவசியம். இந்த இரு கட்சிகளும் தங்களுக்கான ஆதரவு யாருக்கு என்பதை இன்று காலை வரை அறிவிக்காமல் இருந்தன.

பாமகவிடம் ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார் ஸ்டாலின். துரைமுருகன் மூலமும் பேச்சு நடத்தப்பட்டது.



ஆனால் இனி திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று நிலைப்பாட்டினை எடுத்துள்ள பாமக ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு தரப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் கனிமொழியின் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இனி திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று நிலைப்பாட்டினை எடுத்துள்ள பாமக ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு தரப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் கனிமொழியின் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


ஆனால் இனி திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று நிலைப்பாட்டினை எடுத்துள்ள பாமக ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு தரப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் கனிமொழியின் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியிடம் திமுக, தேமுதிக ஆகிய இருவருமே ஆதரவு கேட்டுள்ளனர். எனவே காங்கிரஸ் யாரை ஆதரிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியானால் 6-ஆவது இடத்தைப் பெறும் எதிர்க்கட்சி எது என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும்
.

Thursday 20 June 2013

பழ. நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்கள் பெற்ற வெளிநாட்டு பணம் எவ்வளவு..?- அதிர்ச்சி ‘சதி’ அம்பலம்.

பழ. நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்கள் பெற்ற வெளிநாட்டு பணம் எவ்வளவு..?- அதிர்ச்சி ‘சதி’ அம்பலம்.





தமிழீழ ஆதரவு தலைவர்களான பழ. நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்ட பல  உணர்வாளர்களை பலவீனப்படுத்தும் ‘ரகசிய திட்டம்’ ஒன்று கசிந்துள்ளது.  அதிர்ச்சிக்குறிய அந்த “டெல்லி சதி திட்டம்” மிக தெளிவாக திட்டமிட்ட ஒன்றாக இருக்கிறது. முதன் முதலாக தமிழ் இணயைதளத்திற்கு கிடைத்துள்ள அந்த அதிர்ச்சி தகவல் பற்றிய விவரம் இப்படி தொடங்குகிறது….
விரைவில் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி வருகிறது காங்கிரஸ் கட்சி. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவே டெல்லி தகவல் தெரிவிக்கின்றது. காரணம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த எதிர்ப்பு இருக்கின்றது. அதை கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கவனித்தது. அப்படி ஒரு நிலை வரும் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் நீடித்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை மோசமானதாகிவிடும். இந்த முறை திராவிடக கட்சிகளான தி.மு.க.-வும் சரி, அ.தி.மு.க-வும் சரி காங்கிரஸுடன் கூட்டணி வைக்கப்போவிதில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அப்படியானால் வேறு கட்சிகளை இணைத்துகொண்டுதான் தேர்தலை சந்திக்க வேண்டும்.
அப்படியான சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு இங்கே சவாலாக இருப்பது தமிழ் உணர்வாளர்கள் கட்சியும் அமைப்புகளும்தான். கடந்த தேர்தலில் இவர்களின் தீவிர பிரச்சாரம் ‘ஈழ மக்கள் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை’ அம்பளப்படுத்தியது. அவர்களின் பிரச்சாரத்திற்கு எதிர் பிரிச்சாரம் என்பது எடுபடவில்லை. தமிழக மக்களை தெளிவுபடுத்தியிருக்கிறது உணர்வாளர்கள் தரப்பு.
அப்படியான தமிழ் உணர்வாளர்களுக்கு எதிராக என்ன செய்யலாம். எதை செய்தால் அவர்களை பலவீனப்படுத்தலாம் என்பதை தீவிரமாக யோசித்தது டெல்லி தலைமை.  ரகசிய சதி திட்டமும் இங்குதான் தொடங்கியது. அதன் பேரில் கடந்த ஓரிரு மாதங்களாக ஒரு குழு உலகில் தமிழரகள் அதிகம் வாழும் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த குழு இங்கே தமிழகத்தில் உள்ள உணர்வாளர்களுடன் இணைந்து செயல்படுபவர்களுடன் ஊடுருவியது. சிலரிடம் ‘எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம்’- இலங்கைக்கும் சென்று வரலாம். உங்களுக்கான பாதுகாப்பு உத்ரவாதத்தை டெல்லி ஏற்கும் என்பதோடு சில கூடுதல் சலுகைகளையும் அளித்தது. இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள உண்மையான உணர்வாளர்களின் ஒத்துழைப்பு இல்லை. உடனே அங்குள்ள துரோக கருணா கும்பளின் ஆதரவோடு ஒரு பட்டியலை தயாரிக்க ஏற்படானது.
அதாவது தமிழகத்தில் உள்ள, பழ.நெடுமாறன், வைகோ, சீமான், கொளத்தூர் மணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடங்கி, தமிழ் தேசிய இயக்கங்கள், அமைப்புகள், உணர்வாளர்கள் அமைப்பு, ஈழ ஆதரவு இயக்கங்கள் ஆகியோருக்கு உலக தமிழர்களிடம் எப்படி நிதி திரட்டப்பட்டது. அந்த தொகை எந்தெந்த வழிகளில் அனுப்பப்பட்டது. யார் யாருக்கு எவ்வளவு தொகை. அந்த பணத்தை கொடுத்த வெளிநாட்டு அமைப்புகள் எவை, வெளிநாட்டு தமிழர்கள் யார் என்ற பட்டியலை எல்லாம் தேடி எடுத்திருக்கிறது. அல்லது ‘உருவாக்கி’ பெற்றிருக்கிறது.
அப்படியான பட்டியலை இங்கே தமிழகத்தில், ஊடகங்களின் வழியாக வெளியிட இருக்கிறது. இங்கே ஈழ ஆதரவு என்று முழக்கமிடும் தலைவர்களின் லட்சணம் இதுதான். இப்படி பணத்தை பெற்றுக்கொண்டுதான் இவர்கள் ஈழ அதரவு என்ற முழக்கத்தை தூக்கி பிடித்து வருகிறார்கள். இப்படியானவர்களின் பிரச்சாரத்தை இனியும் நம்பவேண்டாம் என்று மறுமுனை பிரச்சாரத்தை செய்ய இருக்கிறார்கள். இந்தவித பிரச்சாரம் தமிழக உணர்வாளர்களையும், கட்சி, அமைப்புகளையும் பலவீனப்படுத்தும். படுத்தவேண்டும் என்பதே திட்டம்.
இது இளைஞர்களிடத்திலும், பொது மக்கள் இடத்திலும் ஒரு அவப்பெயரை ஏற்படுத்தும். அல்லது அப்படி ஏற்படுத்த வேண்டும். அதற்கு சில ஊடகங்களை, சில ஊடக பிரச்சாரர்களை பயன்படுத்த வேண்டும் என்று மிக நுணுக்கமாக திட்டமிட்டு வருகிறது டெல்லி.
எனவே மிக வைரவில் அப்படியான ஒரு பட்டியல், யார் யார் எவ்வளவு பணத்தை பெற்றார்கள் என்ற புள்ளி விவர கணக்கு வெளியாகும் என்ற உறுதியான தகவல் கிடைத்திருக்கிறது. அந்த புள்ளி விவரம்? உண்மையானதா அல்லது போலியானதா என்பதைவிட அது ஏற்படுத்த போகும் தாக்கம்தான் ‘காங்கிரஸ் கட்சிக்கு பலன்’ என்கிறது விவரமறிந்த டெல்லி வட்டாரம்.

இந்தோனேசியாவில் காட்டுத்தீ: சிங்கப்பூர் நகர மக்கள் புகையால் பாதிப்பு

இந்தோனேசியாவில் காட்டுத்தீ: சிங்கப்பூர் நகர மக்கள் புகையால் பாதிப்பு



சிங்கப்பூர், ஜூன் 20-

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு தென்மேற்கில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. 17 ஆயிரத்திற்கும் மேலான தீவுகள் கொண்ட இந்த நாட்டின் சுமத்ரா தீவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. கடந்த ஒரு வாரகாலமாக எரிந்துவரும் இந்த காட்டுத் தீக்கு சிங்கப்பூர் நகரம் புகையால் சூழப்பட்டுள்ளது. 

இதனால் காற்று மண்டலம் மாசு அடைந்து அங்குள்ள மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது சட்ட விரோத காட்டுத் தீயாக சிங்கப்பூர் கருதுகிறது. இதனால் இரு நாடுகளிடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவு காண இருதரப்பு அதிகாரிகளும் இன்று ஜகார்த்தாவில் கலந்து ஆலோசித்தனர்.

இதுகுறித்து ஜகர்த்தா நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிங்கப்பூர் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூர் மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பாதிக்கும் விதத்தில் காற்றை மாசுபடுத்த எந்த ஒரு நாட்டுக்கும் எந்த ஒரு நகராட்சிக்கும் உரிமை கிடையாது என்றும் அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த இந்தோனேசியா, சிங்கப்பூர் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கின்றது என்றும், இது இயற்கையின் சீற்றம் என்றும் கூறியுள்ளது.

இந்திய-இலங்கை அரை இறுதி போட்டி: மைதானத்திற்குள் புகுந்து தமிழர்கள் போராட்டம்

இந்திய-இலங்கை அரை இறுதி போட்டி: மைதானத்திற்குள் புகுந்து தமிழர்கள் போராட்டம்



கார்டிப், ஜூன் 21- 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது அரை இறுதி போட்டி நேற்று இங்கிலாந்தில் சவுத்வேல்சில் உள்ள கார்டிப் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய வீரர்கள் பந்து வீச இலங்கை அணியில் திலகரத்னே தில்ஷனும், குசால் பெரேராவும் பேட்டிங் செய்துக்கொண்டிருந்தனர். 

அப்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சேவை கண்டித்து அறிவிப்பு அட்டையை பிடித்தவாறு ஒரு தமிழரும், விடுதலைப் புலிகளின் கொடியை பிடித்தவாறு ஒரு தமிழரும் மைதானத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தில்ஷனும், குசால் பெரேராவும் செய்வது அறியாது திகைத்து நின்றனர். 

உடனே மைதான கண்காணிப்பு காவலர்கள் உள்ளே புகுந்து அவர்களை மடக்கி பிடித்தனர். இதனால் இந்திய இலங்கை அரை இறுதி போட்டியில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு காணப்பட்டது. 

போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக இந்த மைதானத்தின் வெளியேயும் ராஜபக்சேவை கண்டித்து போராட்டம் நடந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

.
மும்பை, ஜூன் 20- 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்து சில தினங்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது. 

கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58.98 ஆக இருந்ததே இதுவரை மிக மோசமான சரிவாக கூறப்பட்டது. இன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.93 ரூபாயாக சரிந்துள்ளது. 

இது குறித்து கோடாக் மகேந்திரா வங்கியின் துணைத்தலைவர் மற்றும் இயக்குனருமான உதய் கோடாக் கூறியதாவது:- 

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூபாயின் மதிப்பு 45 சதவீதம் சரிந்துள்ளது. இது உள்நாட்டு பொருளாதாரம், அதிகரித்துவரும் போட்டியில் பின்னடைவை சந்தித்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.  

தற்காலிகமான தீர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உற்பத்தி தொடாந்து அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது தற்காலிக தீர்வாகவே இருக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரகாண்ட் வெள்ளத்தில் கிராமம் அடியோடு அழிந்தது: சாவு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும்

உத்தரகாண்ட் வெள்ளத்தில் கிராமம் அடியோடு அழிந்தது: சாவு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும்


புதுடெல்லி, ஜூன். 20- 
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இமயமலையே அதிரும் வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 
கேதார்நாத் பள்ளத்தாக்கு பகுதியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கரையோரத்தில் இருந்த வீடுகள் அடுக்கு மாடி கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன.
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கேதாநாத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து புனித யாத்திரை சென்றனர். அவர்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.சாலைகள் துண்டிக்கப்பட்டதால் அவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். 
வெளியூர் சுற்றுலாப் பயணிகளை மீட்டு அழைத்து வருவதற்காக 13 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மலைப்பகுதியில் சிக்கிக் கொண்டவர்கள் அதில் மீட்கப்பட்டு தலைநகர் டேராடூன் அழைத்து வரப்படுகிறார்கள். 
அலக்நந்தா உள்ளிட்ட ஆறுகளில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுவரை 500 சாலைகள், 170 பாலங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. மீட்பு பணியில் துணை ராணுவப்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆயிரக்கணக்கான உள்ளூர் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
தொடர்ந்து அங்கு மழை நீடிப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் மாய மானவர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இதனால் சாவு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும் என்று அஞ்சப்படுகிறது. 
மாநில அரசு சாவு எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. மீட்பு குழுவினர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் சாவு எண்ணிக்கை தெரிய வருகிறது. 
கேதார் கட்டி என்ற இடத்தில் ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமம் வெள்ளத்தில் அடியோடு அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதில் வசித்த மக்கள் கதி என்ன வென்று தெரியவில்லை. கிராமம் உருக்குலைந்து கிடக்கிறது. 
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநில வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட்டனர். மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங்கும் வெள்ளம் பாதித்த பகுதிகளை தனியாக பார்வையிட்டார். 
மாநில முதல்-மந்திரி விஜய் பருகுணாவை டேராடூனில் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசினார். மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவது பற்றி ஆலோசனை நடத்தினார்கள். 
பின்னர் நிருபர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ரூ.1000 கோடி நிவாரண உதவி அளிக்கப்படும். இதில் ரூ.145 கோடி உடனடியாக வழங்கப்படும் என்றார். வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், வீடு இழந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், வீடு சேதம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். 
உத்தரகாண்டில் சமோலி மற்றும் ருத்ர பிரயாக் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இருந்த 2700 பக்தர்களும், உள்ளுரைச் சேர்ந்தவர்களும் மீட்கப்பட்டனர். கோவில் நகரமான பத்ரிநாத் இன்னும் 12 ஆயிரம் பக்தர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
மழை வெள்ளத்தில் கேதார்நாத் பள்ளத்தாக்கு பகுதி முழுமையாக சேதம் அடைந்து விட்டது. கேதார்நாத் கோவிலையும் வெள்ளம் தாக்கியது. கோவில் அருகே இருந்த பல்வேறு கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், கேதார்நாத் கோவில் மட்டும் எந்த சேதமும் இல்லாமல் தப்பியது. அதன் சுற்றுச்சுவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. 
வெள்ளம் ஏற்பட்டபோது 300 பக்தர்கள் கோவிலுக்குள் புகுந்து உயிர் தப்பினார்கள். ஆனால் கோவிலுக்கு வெளியே இருந்தவர்களும், பள்ளத்தாக்கு பகுதியில் இருந்தவர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். கோவிலைச் சுற்றிலும் இடிபாடுகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்றி கோவிலை சீரமைக்க ஒரு வருடம் ஆகும். எனவே கோவில் ஓராண்டு மூடப்படும். பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள இயலாது என்று முதல்-மந்திரி விஜய் பகுகுணா கூறினார். 
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் கார்வால் பகுதியில் ராணுவ பயிற்சி மையமும், துணை ராணுவ படையான தேசிய பாதுகாப்பு படையின் பயிற்சி மையமும் மழை வெள்ளத்தில் சேதம் அடைந்துள்ளது. ரூ.100 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு படை இயக்குனர் எஸ்.பந்தோபாத்யாய் தெரிவித்தார்.