Friday, 21 June 2013

வருகிறது 'அம்மா மினரல் வாட்டர்' : பாதுகாப்பான குடிநீர் வழங்க முதல்வர் ஜெயலலிதா திட்டம்

வருகிறது 'அம்மா மினரல் வாட்டர்' : பாதுகாப்பான குடிநீர் வழங்க முதல்வர் ஜெயலலிதா திட்டம்:.




சென்னை: குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் இந்த குடிநீர் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். 

அங்கு உற்பத்தியாகும் குடிநீர் ஒரு லிட்டர் அளவுக் கொண்ட பிளாஸ்டிக் பாட்டீல்களில் நிரப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந் தேதி அன்று தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் 9 இடங்களில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment