Thursday, 20 June 2013

இந்திய-இலங்கை அரை இறுதி போட்டி: மைதானத்திற்குள் புகுந்து தமிழர்கள் போராட்டம்

இந்திய-இலங்கை அரை இறுதி போட்டி: மைதானத்திற்குள் புகுந்து தமிழர்கள் போராட்டம்



கார்டிப், ஜூன் 21- 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது அரை இறுதி போட்டி நேற்று இங்கிலாந்தில் சவுத்வேல்சில் உள்ள கார்டிப் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய வீரர்கள் பந்து வீச இலங்கை அணியில் திலகரத்னே தில்ஷனும், குசால் பெரேராவும் பேட்டிங் செய்துக்கொண்டிருந்தனர். 

அப்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சேவை கண்டித்து அறிவிப்பு அட்டையை பிடித்தவாறு ஒரு தமிழரும், விடுதலைப் புலிகளின் கொடியை பிடித்தவாறு ஒரு தமிழரும் மைதானத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தில்ஷனும், குசால் பெரேராவும் செய்வது அறியாது திகைத்து நின்றனர். 

உடனே மைதான கண்காணிப்பு காவலர்கள் உள்ளே புகுந்து அவர்களை மடக்கி பிடித்தனர். இதனால் இந்திய இலங்கை அரை இறுதி போட்டியில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு காணப்பட்டது. 

போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக இந்த மைதானத்தின் வெளியேயும் ராஜபக்சேவை கண்டித்து போராட்டம் நடந்தது.

No comments:

Post a Comment