பழ. நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்கள் பெற்ற வெளிநாட்டு பணம் எவ்வளவு..?- அதிர்ச்சி ‘சதி’ அம்பலம்.
தமிழீழ ஆதரவு தலைவர்களான பழ. நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்ட பல உணர்வாளர்களை பலவீனப்படுத்தும் ‘ரகசிய திட்டம்’ ஒன்று கசிந்துள்ளது. அதிர்ச்சிக்குறிய அந்த “டெல்லி சதி திட்டம்” மிக தெளிவாக திட்டமிட்ட ஒன்றாக இருக்கிறது. முதன் முதலாக தமிழ் இணயைதளத்திற்கு கிடைத்துள்ள அந்த அதிர்ச்சி தகவல் பற்றிய விவரம் இப்படி தொடங்குகிறது….
விரைவில் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி வருகிறது காங்கிரஸ் கட்சி. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவே டெல்லி தகவல் தெரிவிக்கின்றது. காரணம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த எதிர்ப்பு இருக்கின்றது. அதை கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கவனித்தது. அப்படி ஒரு நிலை வரும் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் நீடித்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை மோசமானதாகிவிடும். இந்த முறை திராவிடக கட்சிகளான தி.மு.க.-வும் சரி, அ.தி.மு.க-வும் சரி காங்கிரஸுடன் கூட்டணி வைக்கப்போவிதில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அப்படியானால் வேறு கட்சிகளை இணைத்துகொண்டுதான் தேர்தலை சந்திக்க வேண்டும்.
அப்படியான சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு இங்கே சவாலாக இருப்பது தமிழ் உணர்வாளர்கள் கட்சியும் அமைப்புகளும்தான். கடந்த தேர்தலில் இவர்களின் தீவிர பிரச்சாரம் ‘ஈழ மக்கள் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை’ அம்பளப்படுத்தியது. அவர்களின் பிரச்சாரத்திற்கு எதிர் பிரிச்சாரம் என்பது எடுபடவில்லை. தமிழக மக்களை தெளிவுபடுத்தியிருக்கிறது உணர்வாளர்கள் தரப்பு.
அப்படியான தமிழ் உணர்வாளர்களுக்கு எதிராக என்ன செய்யலாம். எதை செய்தால் அவர்களை பலவீனப்படுத்தலாம் என்பதை தீவிரமாக யோசித்தது டெல்லி தலைமை. ரகசிய சதி திட்டமும் இங்குதான் தொடங்கியது. அதன் பேரில் கடந்த ஓரிரு மாதங்களாக ஒரு குழு உலகில் தமிழரகள் அதிகம் வாழும் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த குழு இங்கே தமிழகத்தில் உள்ள உணர்வாளர்களுடன் இணைந்து செயல்படுபவர்களுடன் ஊடுருவியது. சிலரிடம் ‘எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம்’- இலங்கைக்கும் சென்று வரலாம். உங்களுக்கான பாதுகாப்பு உத்ரவாதத்தை டெல்லி ஏற்கும் என்பதோடு சில கூடுதல் சலுகைகளையும் அளித்தது. இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள உண்மையான உணர்வாளர்களின் ஒத்துழைப்பு இல்லை. உடனே அங்குள்ள துரோக கருணா கும்பளின் ஆதரவோடு ஒரு பட்டியலை தயாரிக்க ஏற்படானது.
அதாவது தமிழகத்தில் உள்ள, பழ.நெடுமாறன், வைகோ, சீமான், கொளத்தூர் மணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடங்கி, தமிழ் தேசிய இயக்கங்கள், அமைப்புகள், உணர்வாளர்கள் அமைப்பு, ஈழ ஆதரவு இயக்கங்கள் ஆகியோருக்கு உலக தமிழர்களிடம் எப்படி நிதி திரட்டப்பட்டது. அந்த தொகை எந்தெந்த வழிகளில் அனுப்பப்பட்டது. யார் யாருக்கு எவ்வளவு தொகை. அந்த பணத்தை கொடுத்த வெளிநாட்டு அமைப்புகள் எவை, வெளிநாட்டு தமிழர்கள் யார் என்ற பட்டியலை எல்லாம் தேடி எடுத்திருக்கிறது. அல்லது ‘உருவாக்கி’ பெற்றிருக்கிறது.
அப்படியான பட்டியலை இங்கே தமிழகத்தில், ஊடகங்களின் வழியாக வெளியிட இருக்கிறது. இங்கே ஈழ ஆதரவு என்று முழக்கமிடும் தலைவர்களின் லட்சணம் இதுதான். இப்படி பணத்தை பெற்றுக்கொண்டுதான் இவர்கள் ஈழ அதரவு என்ற முழக்கத்தை தூக்கி பிடித்து வருகிறார்கள். இப்படியானவர்களின் பிரச்சாரத்தை இனியும் நம்பவேண்டாம் என்று மறுமுனை பிரச்சாரத்தை செய்ய இருக்கிறார்கள். இந்தவித பிரச்சாரம் தமிழக உணர்வாளர்களையும், கட்சி, அமைப்புகளையும் பலவீனப்படுத்தும். படுத்தவேண்டும் என்பதே திட்டம்.
இது இளைஞர்களிடத்திலும், பொது மக்கள் இடத்திலும் ஒரு அவப்பெயரை ஏற்படுத்தும். அல்லது அப்படி ஏற்படுத்த வேண்டும். அதற்கு சில ஊடகங்களை, சில ஊடக பிரச்சாரர்களை பயன்படுத்த வேண்டும் என்று மிக நுணுக்கமாக திட்டமிட்டு வருகிறது டெல்லி.
எனவே மிக வைரவில் அப்படியான ஒரு பட்டியல், யார் யார் எவ்வளவு பணத்தை பெற்றார்கள் என்ற புள்ளி விவர கணக்கு வெளியாகும் என்ற உறுதியான தகவல் கிடைத்திருக்கிறது. அந்த புள்ளி விவரம்? உண்மையானதா அல்லது போலியானதா என்பதைவிட அது ஏற்படுத்த போகும் தாக்கம்தான் ‘காங்கிரஸ் கட்சிக்கு பலன்’ என்கிறது விவரமறிந்த டெல்லி வட்டாரம்.
No comments:
Post a Comment