Thursday 20 June 2013

இந்தோனேசியாவில் காட்டுத்தீ: சிங்கப்பூர் நகர மக்கள் புகையால் பாதிப்பு

இந்தோனேசியாவில் காட்டுத்தீ: சிங்கப்பூர் நகர மக்கள் புகையால் பாதிப்பு



சிங்கப்பூர், ஜூன் 20-

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு தென்மேற்கில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. 17 ஆயிரத்திற்கும் மேலான தீவுகள் கொண்ட இந்த நாட்டின் சுமத்ரா தீவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. கடந்த ஒரு வாரகாலமாக எரிந்துவரும் இந்த காட்டுத் தீக்கு சிங்கப்பூர் நகரம் புகையால் சூழப்பட்டுள்ளது. 

இதனால் காற்று மண்டலம் மாசு அடைந்து அங்குள்ள மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது சட்ட விரோத காட்டுத் தீயாக சிங்கப்பூர் கருதுகிறது. இதனால் இரு நாடுகளிடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவு காண இருதரப்பு அதிகாரிகளும் இன்று ஜகார்த்தாவில் கலந்து ஆலோசித்தனர்.

இதுகுறித்து ஜகர்த்தா நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிங்கப்பூர் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூர் மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பாதிக்கும் விதத்தில் காற்றை மாசுபடுத்த எந்த ஒரு நாட்டுக்கும் எந்த ஒரு நகராட்சிக்கும் உரிமை கிடையாது என்றும் அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த இந்தோனேசியா, சிங்கப்பூர் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கின்றது என்றும், இது இயற்கையின் சீற்றம் என்றும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment