Monday 1 July 2013

தெலுங்கானா விவகாரத்தில் முக்கிய முடிவு : மத்திய அரசு விரைவில் அறிவிப்பு:

தெலுங்கானா விவகாரத்தில் முக்கிய முடிவு : மத்திய அரசு விரைவில் அறிவிப்பு:


ராஜமுந்திரி: ""தெலுங்கானா விவகாரத்தில், முக்கிய முடிவுகளை எடுப்பது தொடர்பாக, மத்திய அரசு தீவிரமாகவும், உறுதியாகவும் உள்ளது,'' என, ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன் கூறினார்.

ராஜமுந்திரியில், நிருபர்களிடம் பேசிய நரசிம்மன் கூறியதாவது: மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தெலுங்கானா பிரச்னைக்கு தீர்வு காண்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக, ஒருமித்த கருத்தும், மக்களிடையே நல்ல புரிதலும் ஏற்பட வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன், இங்கு வந்திருந்த, காங்கிரஸ் பொதுச் செயலரும், மாநில காங்., பொறுப்பாளருமான, திக் விஜய் சிங், தெலுங்கானா விவகாரம் தொடர்பாக, அனைத்து தரப்பு மக்களிடமும் பேச்சு நடத்தினார். இதுதொடர்பான அறிக்கையை அவர், காங்., மேலிடத்திடம் சமர்பிக்கவுள்ளார். இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என, மத்திய அரசும் விரும்புகிறது. இவ்வாறு கவர்னர் நரசிம்மன் கூறினார். 

இதற்கிடையில், ஐதராபாத்தில், நிருபர்களிடம் பேசிய, காங்கிரஸ் பொதுச் செயலர் திக் விஜய் சிங், ""தெலுங்கானா பிரச்னையில், முடிவெடுக்கும் நிலைமை இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. இருந்தாலும், எவ்வளவு காலத்திற்குள் முடிவு அறிவிக்கப்படும் என்பதை சொல்ல முடியாது,'' என்றார்.

அதே நேரத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு முன், தெலுங்கானா விவகாரத்தில், மத்திய அரசு தன் இறுதி முடிவை அறிவிக்கும் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment