Wednesday 10 July 2013

லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்; அத்துமீறலை நியாயப்படுத்துகிறது, சீனா

லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்; அத்துமீறலை நியாயப்படுத்துகிறது, சீனா:


லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்; அத்துமீறலைபீஜிங்,

இந்திய எல்லைக்குள் படைகளின் அத்துமீறலை சீனா நியாயப்படுத்தி உள்ளது.

சீன ராணுவ வீரர்கள்

இமாசலபிரதேசம் லடாக் அருகே உள்ள ஜுமார் பகுதியில் லே என்ற இடத்தில் சீன ராணுவம் கடந்த ஏப்ரல் மாதம் ஊடுருவியது. பின்னர் இரு நாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் சமரச முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து சீன ராணுவம் இந்திய எல்லையில் இருந்து வெளியேறியது.

அதைத்தொடர்ந்து சீன ராணுவத்தினரின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்தியா சார்பில் அமைக்கப்பட்டிருந்த கோபுரம் அகற்றப்பட்டு அங்கு ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.

மீண்டும் ஊடுருவல்

இந்த நிலையில் கடந்த ஜூன் 17–ந்தேதி மீண்டும் சீன மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் ஜுமார் பகுதியில் ஊடுருவி, அங்கு இந்திய ராணுவம் அமைத்திருந்த கண்காணிப்பு அமைப்புகளையும், பதுங்கு குழிகளையும் சேதப்படுத்தினர். மேலும் அங்கு வைத்திருந்த கண்காணிப்பு கேமராக்களின் ஒயர்களையும் துண்டித்து சேதப்படுத்தினர்.

இவ்வாறு அடிக்கடி இந்திய பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவும் சம்பவம் இந்தியாவில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மாற்ற முடியாது

இந்தநிலையில் இந்த பிரச்சினை குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– எல்லைப்பகுதியில் நிலைமை சீராக உள்ளது. ஊடுருவல் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. நாங்கள் அங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

 எங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன ராணுவத்தினர் எல்லைக்கோடு அருகே, சீனப்பகுதியில்தான் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப்பகுதியில் தற்போது இருக்கும் நிலையை யாராலும் (இந்தியாவோ – சீனாவோ) மாற்ற முடியாது. எல்லைப்பகுதியின் அமைதிக்கு இந்தியாவுடன் நாங்கள் இணைந்து செயல்படவே விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

எல்லையில் எதுவும் செய்யக்கூடாது என்பதை மீறி இந்தியா கண்காணிப்பு கேமராக்களை அமைத்ததால் சீன ராணுவம் அவற்றை சேதப்படுத்தியது என்னும் கருத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

 நியாயப்படுத்துகிறது, சீனா

No comments:

Post a Comment