Monday 1 July 2013

கூட்டணியா? காங்கிரசுடனா? யார்சொன்னது?: ஸ்டாலின்


கூட்டணியா? காங்கிரசுடனா? யார்சொன்னது?ஸ்டாலின்: 




சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத்தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் தயவுடன் வெற்றி பெற்றார் கனிமொழி. இதனால் திமுக - காங்கிரஸ் இடையே மீண்டும் உறவு மலர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், 


தேர்தல் கூட்டணி தொடர்பாக நாங்கள் ஒன்றும் முடிவு எடுக்கவில்லை. மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனி தலைமையில் தேர்தல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுதான் முடிவு செய்து அறிவிக்கும். எங்கள் கருத்துகளையும் அந்தக் குழுவுக்குத் தெரிவிப்போம் என்று கூறினார்.

திமுகவின் நிலை இந்தநிலையில் மதுரையில் நடைபெற்ற நிதியளிப்பு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் உடன் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார். 


ராஜ்யசபா தேர்தலில் 23 உறுப்பினர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று திமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்தது திமுக தலைவர் கருணாநிதியின் ராஜதந்திரம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆதரவோடு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்ற உரிமையிலேயே காங்கிரசிடம் ஆதரவு கோரப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இரு கட்சிகளின் நிலைப்பாடும் முரண்பட்டதாலேயே கூட்டணியை விட்டு திமுக வெளியேறியது எனவே இனிவரும் தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இதுபற்றி தவறான செய்திகளை பத்திரிகையாளர்கள் வெளியிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 





































No comments:

Post a Comment