Monday 1 July 2013

Our Collector always great man..அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ்

Our Collector always great man..



தமிழகத்தில் அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ்
அதிகாரி டம்மியாக்கப்பட்டிருக்கிறார்.
இனிமேல்வணிகவரித்துறையின்
இணை செயலாளராக இருப்பாராம். பசையுள்ள
பதவிதான். ஆனால் பைசா வாங்காத அன்சுல்
மிஸ்ராவுக்கு இது எதற்கு பயன்படப் போகிறது?
அவருக்கு மக்களோடு மக்களாக ஃபீல்டில் இறங்கிக்
கலக்கும் வேலைதான் சரிப்பட்டு வரும்.
வணிகவரிக்கு எல்லாம் வேறு ஆட்கள்
இருக்கிறார்கள்.
அன்சுல் மிஸ்ராவின் working style-
செண்டான் என்றொரு மனிதர். எங்கள்
அமத்தா ஊர்க்காரர்.
அவரது மகளுக்கு பண்ணாரியம்மன் பொறியியல்
கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால்
ஃபீஸ் கட்ட பணம் இல்லை. வங்கியில் லோன்
வாங்குவது பற்றிய விவரங்கள் தெரியாமல்
விட்டுவிட்டார். கடைசி நேரத்தில் பணம் புரட்ட
முடியாமல் கிட்டத்தட்ட படிப்பே வேண்டாம்
என்று முடிவு செய்துவிட்டார்கள்.
நல்லவேளையாக அந்தப் பக்கம் ஆய்வுக்குச் சென்ற
அன்சுல் மிஸ்ராவிடம் இந்தத் தகவல்
சேர்ந்துவிட்டது. விவரங்களைக்
கேட்டுவிட்டு அடுத்த நாள்
தனது அலுவலகத்திற்கு வரச்
சொல்லிவிட்டு சென்றுவிட்டார். செண்டானும்,
அவரது மகளும் சென்ற போது தேவையான
பணத்தைக்
கொடுத்துவிட்டு “இதை உங்களுக்கு சும்மா தரவில்
என்னிடமும் இப்போதைக்கு அதிகம் பணம்
இல்லை. சம்பளத்தில் இருந்துதான் இதைக்
கொடுக்கிறேன். வங்கிக் கடன் வாங்கித்
தருவதற்கு நான் பொறுப்பு. கையில் வந்தவுடன்
இதை எனக்கு திருப்பிக் கொடுத்தால் போதும்”
என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை படிக்க
வைத்தவர் அன்சுல்.
லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி டேபிளுக்குள்
செருகிக் கொள்ளும் ஆர்.டி.ஓக்கள், சப்-கலெக்டர்கள்
பற்றிய கதைகளையே திரும்பத் திரும்ப கேட்டுக்
கொண்டிருந்தவர்களுக்கு, சம்பளப் பணத்தில்
உதவி செய்த அன்சுல் மிஸ்ராவெல்லாம் நிச்சயம்
ஆச்சரியமான அதிகாரிதான்.
சமீபகாலத்தில் அவர் மதுரையை கலக்கிக்
கொண்டிருக்கிறார் என்று செய்திகளை பார்த்த
போது ஆச்சரியம் எதுவும் இல்லை. அவர்
அப்படித்தான் என்று தெரியும்.
இப்பொழுது மதுரையை விட்டு அனுப்பிவிட்டார்கள்
என்ற போதும் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆட்சியாளர்கள் எப்பவும் இப்படித்தான் என்பதும்
நமக்குத் தெரியும் அல்லவா?

#

No comments:

Post a Comment